உலக பொதுமறை திருக்குறளில் இந்து மதம் குறித்த குறிப்புகள் உள்ளது.
திருக்குறள் இறைவனின் திருவடிகளை பற்றுபவனாலேயே பிறவியாக பெருங்கடலை கடக்க முடியும்னு சொல்கிறது. திருவடிகளை பற்றுதல் என்பது இந்து மதத்தில் மட்டுமே உள்ள கோட்பாடு. மேலும்,
‘ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி‘
‘மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் (திருமால்)
தாஅயது எல்லாம் ஒருங்கு‘
இவ்விரு குறள்களிலும் இந்திரன், திருமால் போன்ற தெய்வங்களை நேரடியாக குறிப்பிடுவதால் திருக்குறளில் இந்துமதம் சார்ந்த கருத்துகள் உண்டு…!
கிறிஸ்து பிறப்பிற்கு முன்பாக எழுதப்பட்ட புறநானூற்றிலும் இந்துமதம் பற்றிய குறிப்புகள் உண்டு.
‘தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குஉடை முருகன் கோட்டத்துக் கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே‘
‘கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை‘
இவ்விரு புறநானூற்றுப் பாடல்களின் மூலம் ‘முருகன், இராமன்‘ என்ற இரு இந்துமதக் கடவுள்கள் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளாதால் புறநானூற்றிலும் இந்துமதம் பற்றிய குறிப்புகள் உண்டு…!
அகநானூற்றிலும் இந்துமதம் பற்றிய குறிப்புகள் உண்டு.

‘வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த பல் வீஷ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே‘
‘மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி‘
இப்படி இராமாவதாரத்தையும், கிருஷ்ணாவதாரத்தையும், பரசுராமாவதாரத்தையும் நேரடியாக குறிப்பிடுவதால் அகநானூற்றிலும் இந்துமதம் பற்றிய குறிப்புகள் உண்டு ப்ரோ.
பதிற்றுப்பத்தில்…
‘மாய வண்ணனை (திருமால்) மனன் உறப் பெற்று, அவற்கு ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து, புரோசு மயக்கி‘
இந்த பதிற்றுப்பத்து வரிகள் திருமாலை நேரடியாகக்குறிப்பதால் பதிற்றுப்பத்திலும் இந்துமதம் பற்றிய குறிப்புகள் உண்டு.
கலித்தொகையில்…
‘இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன் (சிவன்) உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக, ஐ இரு தலையின் அரக்கர் கோமான் (இராவணன்)‘
இப்படி நேரடியாக இராமாயணத்தில் இராவணன் கயிலாய மலையை தூக்க முற்பட்ட நிகழ்வைக் குறிப்பிடுவதால் நிச்சயமாக கலித்தொகையில் இந்துமதம் பற்றிய குறிப்பு உண்டு.
ஐங்குறுநூற்றில்…
‘நீல மேனி (சிவன்) வாலிழைபாகத் தொருவ னிருதா ணிழற்கீழ் மூவகை யுலகு முகிழ்த்தன முறையே‘
என்று சிவபெருமானுடன் அன்னை பார்வதி சேர்ந்து ஓருடல் இரு பாகமாக இருக்கும் அர்த்தநாரீஸ்வரரின் கோலத்தை குறிப்பிடுவதால் நிச்சயமாக ஐங்குறுநூற்றிலும் இந்துமதம் பற்றிய குறிப்புகள் உண்டு…!
பரிபாடலில்…
‘பூவினுள் பிறந்தோன் (பிரம்மா) நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப‘
இப்படி நான்கு வேதங்களையும், பிரம்ம தேவரையும் நேரடியாகக்குறிப்பதால் பரிபாடலிலும் இந்துமதம் பற்றிய குறிப்புகள் உண்டு.
முல்லைப்பாட்டில்…
‘நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்த மாஅல் போல‘
இப்படி திருமாலை நேரடியாகக் குறிப்பதால் முல்லைப்பாட்டிலும் இந்துமதம் பற்றிய குறிப்புகள் உண்டு.
நற்றிணையில்…
‘மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன் வாலியோன் அன்ன வயங்குவெள் ளருவி‘
என்று திருமாலை குறிப்பிடுவதால் நிச்சயமாக நற்றிணையிலும் இந்துமதம் பற்றிய குறிப்புகள் உண்டு.
சிலப்பதிகாரத்தில்…
‘நாராயணா என்னாத நாவென்ன நாவே,கரியவனைக் காணாத கண் என்ன எண்ணே‘
என்று திருமாலை நேரடியாக நாராயணன் என்று குறிப்பிடுவதால் சிலப்பதிகாரத்திலும் இந்துமதம் பற்றிய குறிப்புகள் உண்டு.
தொல்காப்பியத்தில்…
‘மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே‘
மாயோன் என்றால் திருமால், சேயோன் என்றால் முருகன், வேந்தன் என்றால் இந்திரன். இது தவிர்த்து பார்ப்பான், கொற்றவை போன்ற பல இந்துமத கருத்துகள் தொல்காப்பியத்தில் உண்டு.
நன்னூலில்…
‘பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த நான்முகன் தொழுதுநன் கியம்புவ எழுத்தே‘
13 ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட இலக்கண நூலிலும் நான்முகன் எனும் பிரம்ம தேவரை குறிப்பிட்டுள்ளதால் நன்னூலிலும் இந்துமதம் பற்றிய குறிப்புகள் உண்டு.
புறப்பொருள் வெண்பா மாலையில்…
‘நீடோளான் வென்றிகொள்கென நிறைமண்டை வலனுயரிக் கூடாரைப் புறங்காணுங் கொற்றவை நிலையுரைத்தன்று‘
என்று கொற்றவையை குறிப்பிடுவதால் புறப்பொருள் வெண்பாமாலையிலும் இந்துமதம் பற்றிய குறிப்புகள் உண்டு. தமிழின் பெரும்பான்மையான அனைத்து நூல்களிலும், அவ்வளவு ஏன் இலக்கண நூல்களில் கூட இந்துமதம் சார்ந்த கருத்துகள் இருக்கும்போது தமிழர்களை மதச்சார்பற்றவர்களாகவும், இந்து மதத்திற்கும் தமிழனுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுவதன் பின்னணி என்ன? சிந்திப்போம் தமிழர்களே…