ஏ.ஆர்.ரஹ்மான் என்ற டூல் கிட்

மா துஜே சலாம்……
மம்மா துஜேசலாம்……

முன்னொரு காலத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் வந்தேமாதரம் எனும் இந்திய சுதந்திர பொன்விழா ஆண்டினை ஒட்டி வெளிவந்த பாப் ஆல்பம் பாடலில் தொகுப்பு ஒன்றின் இந்தி வரிகள் இவை.

இதோ …..இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருக்கிறோம்…..
தமிழ் கூறும் நல் உலகு கொண்டாடி தீர்த்த இசையமைப்பாளர்களில் ஏ.ஆர் ரகுமானுக்கும் இடம் உண்டு. ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர். சமீபத்திய நாட்களில் சேர்க்கை சரியில்லை என்பதை தற்போது அவரது நடவடிக்கைகள் தெரியப்படுத்துகின்றன.

தமிழை தாயாக பாவிப்பவர்களுக்கு சமீபத்தில் சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுயிருக்கும் புகைப்படத்தை பார்த்தாலே போதும்.

எத்துனை தூரம் தரம் தாழ்ந்து போயிருக்கிறார் என்பது மிக நன்றாகவே விளங்கும். யாரையோ திருப்தி படுத்த இப்படி செய்தாரா அல்லது இத்தனை நாளும் வெளி உலகுக்கு அவர் காட்டியது முகமூடியா என்பதே முதல் கேள்வியாக தொங்கி நிற்கும்.

ஏற்கனவே வெளிநாடுகளில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது அவரது பெண் பிள்ளை நவநாகரீக உடைகளில்…. அறை குறை ஆடைகளில் சுற்றி திரிந்த புகைப்படங்கள் ஏராளமான காணக்கூடியதாக இருக்கிறது..,… அதே சமயம் இங்கு நம் தேசத்தில்.. தமிழகத்தில் ஏதேனும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது முழுமையாக மூடிய ஆடைகளை… மத அடையாளமாக…… மதத்தின் பெயரால் முற்று முழுதாக மூடி ஆடை உடுத்தி வந்து பங்கேற்கும் போக்கு அவரிடம்….அவரது குடும்பத்தினருக்கும் சமீபத்திய வழக்கமாக இருக்கிறது.

அப்படி என்றால் இங்கே நம் தேசத்தில் உள்ள ஆண்களை…… ஆண் மக்களை குறித்து எத்தகைய இழிவான கருத்துக்களை அவர்கள் கொண்டு இருக்கிறார்கள்…… என்கிற கேள்வி எழுவது நம் அனைவருக்குமே இயல்பான ஒன்று தானே.

சரஸ்வதி தேவியை இழிவான விதத்தில்… நிர்வாணமாக வரைந்த எம் எப் ஹூஸைன், சல்மான் ருஷ்டிக்கு போன்வருக்கும் இவருக்கும் என்ன பெரிய வித்தியாசம் வந்து விட போகிறது.?

இன்றுள்ள சூழ்நிலையில் அதில் என்ன தவறு என்று இவர் கேட்டால் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.?!!!?

தமிழணங்கு சொற் பதம் கொண்ட பெண்ணின் தோற்றம் எதனை குறிக்கிறது…..‌அல்லது எதன் அடிப்படையிலான குறியீடு என்பதை அவர் தான் விளக்க வேண்டும்…… செய்கிறாரா என்று பார்ப்போம். வரவிருக்கும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இதனை வெளியிட்டு இருக்கிறார் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்.

இன்னமும் சரியாக நுட்பமாக ஆராய்ந்து சொன்னால்,தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பது வேப்பங்காயாக இருக்கிறது….. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனை பழி தீர்க்கும் விதமாக தான் இத்தகையதொரு செயலை செய்ய இவர் மூலம் ஏற்பாடு செய்து இருப்பதாக அடித்து சொல்கிறார்கள் அவர்கள்.

தமிழ் அன்னையை ஓர் கருப்பின பெண் போலும் உருவக படுத்த முனைந்து இருக்கிறார்கள் க்ராதகர்கள். சரியாக சொன்னால் இன ரீதியாக துண்டாடும்…, தூண்டி விடும் செயலை ஈவு இரக்கம் இன்றி செய்ய துணிந்து இருக்கிறார்கள் என்பதே இந்த படத்தில் உள்ள குறியீடு என்று எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.

அத்தகையதொரு சதி கோட்பாட்டை இதற்கு பொருத்தி பார்க்க ……. அதுவும் பொருந்தி போகிறது. அப்படி என்றால்…….

யாருக்காக….????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here