தமிழ்த்தாய் வாழ்த்து இந்து வாழ்க்கை முறையை கூறுகிறதா?

தமிழக அரசு தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழக மாநில பாடலாக அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அரசு நிகழ்ச்சிகளில் இனி தமிழ்தாய் வாழ்த்து பாடல் கட்டாயமாக்கப்படுவதோடு, மாற்றுத்திறனாளிகள் தவிர மற்றவர்கள் எழுந்து நிற்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்தாய் வாழ்த்துப்பாடல், பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணியம் என்ற 1891 ல் வெளியான நாடகத்தில் உள்ள தமிழ்த் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் உள்ள ஒரு பாடலில் சில பகுதிகளை வெட்டி, ஒட்டி, இப்போதுள்ள தமிழ்தாய் வாழ்த்து பாடலை 1970 ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அறிவித்தது.

அப்போதே திராவிடர் கழக தலைவர் ஈ.வே.ரா. அதை கடுமையாக எதிர்த்து தனது விடுதலை ஏட்டில் கருத்து வெளியிட்டார்.

சுந்தரம் பிள்ளை எழுதிய பாடல் இது தான்…

‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே

இந்த பாடலில், பாரத நாடு போற்றப்பட்டுள்ளது.. இந்துக்களின் மங்கலச்சின்னமான திலகம் குறிப்பிடப்பட்டுள்ளது… பரம்பொருள் என்ற இறை தத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது… கடவுள் மறுப்பு கொள்கையுடைய திமுக அரசு பல்லுயிரும் என்ற இடத்திலிருந்து சிதையாவுன் என்பது வரை 5 வரிகளை நீக்கிவிட்டு பின்வருமாறு தமிழ்தாய் வாழ்த்தை அறிவித்தது.

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

ஆனாலும் தமிழ்தாய் உருவகம், வாழ்த்துப்பாடல் அனைத்தும் இந்து நம்பிக்கை அடிப்படையாக இருப்பதால் நாத்திகர்கள் பலருக்கும் இதை பின்பற்றுவதில் உறுத்தல் இருந்து வருகிறது. தற்போது ஸ்டாலின் தலைமையிலான அரசு அதை கட்டாயமாக்கியுள்ளதால், வேறு வழியில்லாமல் ஏற்றாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

வாழ்த்துப்பாடலை கட்டாயமாக்கினால் போதாது… தமிழ் உண்மையிலேயே வளர வேண்டுமானால், தமிழ் மொழியை பிழையின்றி தமிழர்களுக்கும், மற்றவர்களுக்கும் கற்றுத்தரவேண்டும்.. தமிழக அரசு செய்யுமா என்பதே தமிழன்பர்களின் எதிர்பார்ப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here