வரி விதிப்பு… ஆங்கிலேயேனுக்கு பாடம் எடுத்த சோழர்கள்!!

இன்றைய தேதியில் தமிழகத்தில் சொத்து வரி ஏகத்திற்கும் உயர்த்தி அதிரடித்திருக்கிறார்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்.

வரி மாத்திரமே நாட்டின் வருவாயாக பார்க்கப்படுகிறது அதிலும் நிலத்தின் மீதான வரிவசூல் மட்டுமே நாட்டின் மூலதன வரியாக பார்க்கப்படுகிறது …… ஆனால் அதனை முறையாக பராமரிப்பு செய்கிறார்களா என்றால் வெகு நிச்சயமாக இல்லை…. காரணம் நம்மவர்களிடத்திலும் இது குறித்த சரியான புரிதல் இல்லை.

உதாரணமாக ஒன்று பாருங்கள்….. ரயத்துவாரி என்கிற சொல் வரிவசூல் புத்தகங்களில் காணப்படும். இது என்ன என்று கேட்டு பாருங்கள். ஒரு கணம் குழம்பி போவார்கள். ரயத்து என்கிற சொல் உழவர் எனும் பதத்தில் உபயோகிக்கப்படுகிறது. உழவன் தன் நிலத்திற்கான வரியை நேரிடையாக அரசுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக அடையாள படுத்தப்பட்ட வரியை தான் ரயத்துவாரி என்கிறார்கள். உருது கலப்பு சொல்லான இதனை கொண்டு வந்தது மன்றோ. தாமஸ் மன்றோ. சென்னை அண்ணாசாலையில் கன கம்பீரமாக குதிரையின் மேல் உட்கார்ந்து கொண்டு இருப்பாரே
அவரே தான். ஸ்காட்லாந்துகாரர்.அசகாய சூரர். ராணுவ வீரராக பணியில் சேர்ந்து தன் அசாத்திய திறமையால் கலெக்டராக…… பல மாகாணங்களை கட்டி ஆண்டு இருக்கிறார் அந்நாளில். நம் தமிழகத்தில் முஸ்லிம் பள்ளிகளின் சூத்திரதாரி இவர். இந்து பள்ளி தனியாக முஸ்லிம் பள்ளி தனியாக ஏற்பாடு செய்து பிள்ளைகள் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்து கொடுத்தார்…. மொத்தத்தில் படிக்க வேண்டும் என்றார். இது தான் இன்றைய மதராஸாக்களாக உருமாற்றம் கண்டு இருக்கிறது என்பது தனிக் கதை.

மந்திராலய ராகவேந்திரா பிருந்தாவனம் அமைந்த இடத்தின் நிலம் தொடர்பான பிரச்சினை வெகு நுட்பமாக தீர்த்து வைத்தது இவர் தான். அது பிள்ளையார் சுழி. அதனடிப்படையில் அந்நாளைய விவசாய நிலங்களை புரிந்து கொண்டு ஜமீன்தார் வரியை பகுப்பாய்வு செய்து கொண்டு வந்தது தான் ரயத்துவாரி.

சரி ஏன் உருது பெயர். ?????

காரணம் அந்நாளில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் தான் வரி வசூலிக்கும் உரிமையை பெற்று இருக்கிறார்கள். கிட்டத்தட்ட தண்டல் வரி போல இஷ்டத்திற்கும் புகுந்து விளையாடி இருப்பதாக தகவல்கள் தற்போதும் ஆவண காப்பகங்களால் பராமரிக்க படுகிறது. அவர்களின் அட்டகாசங்களை முடிவுக்கு கொண்டு வர இவர் கொண்டு வந்தது தான் ரயத்துவாரி. மூன்று படி நிலை வரியை இரண்டு படி நிலையாக குறைத்து இவர் செய்த சாதனை அந்நாளில் மக்களிடையே ஏக போக வரவேற்பு பெற்றது. அதனை நம் தற்போதைய இந்திய அரசு நிர்வாகம் கொண்டு வந்து திரும்ப பெற்ற விவசாய சட்டம் போல் இந்த ரயத்துவாரியை கொண்டு வந்து தாமஸ் மன்றோ வெற்றிகரமாக நடைமுறை படுத்தி இருக்கிறார் அந்நாளில்.

இன்றளவும் இவரது பாணியை தான் நம் இந்திய மாநிலங்களில் பெரும்பாலும் பின்பற்றவும் செய்கிறார்கள். நடைமுறையில் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் நிஜத்தில் இதன் முன்னோடி….. மூலம்….. நம் சோழனின் நில அளவை நிர்வாக திறன் என்று இவரே குறிப்பிடுகிறார்.

அப்படி என்ன விஷேசம் அதில் இருக்கிறது…….?

இந்தியா முழுவதும் சுற்றி வந்தாலும் சோழன் ஆண்ட பூமியை வெகு சுலபமாக கண்டு பிடித்து விடலாம். இன்றைய அளவையில் ஒவ்வொரு நாற்பது கிலோமீட்டர் தொலைவிலும் ஒரு பெரிய ஊர் வரும். ஒவ்வொரு இருபது கிலோமீட்டர் தொலைவிலும் ஒரு சிறிய ஊர் வரும் அப்படி வரும்படி நகர் நிர்மாணம் செய்திருக்கிறார்கள் விஜயாலய சோழன் வழிவந்த ராஜராஜ சோழன் மற்றும் அவரது பிள்ளையான ராஜேந்திர சோழன்.இத்தகைய ஊர் நிர்மாணம் ராஜராஜனுடையது என்றால் ஊரில் உள்ள கேணி மற்றும் ஏரிகளை நிர்மாணம் செய்திருப்பது ராஜேந்திர சோழன் காலத்தில் தான். மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளில் மிகப் பெரிய ஏரி வீரநாராயணபுரம் ஏரி தான். தற்போதைய நம்மூர் பாஷையில் வீராணம் ஏரி இவர்கள் காலத்தில் கொண்டு வந்த வெட்டி வைத்தது தான்.

படை நடத்திச் சென்ற சமயத்தில் அவர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு வர பயிற்சி போல் இந்த செயலை செய்து இருக்கிறார்கள். பயிற்சிக்கு பயிற்சி ஆச்சு. ஊருக்கு ஒரு ஏரியும் ஆச்சு. எப்படி நம்மவர்களின் நிர்வாக திறன்.

மூன்று முதல் ஆறு பெரிய அளவிலான நகரங்களை இணைக்க ஏரி ஏற்படுத்தி வைத்து இருக்கிறார்கள் அதனை கொண்டு விவசாயம் மட்டுமல்லாமல் போக்குவரத்தும் பார்த்து இருக்கிறார்கள். ஊருக்கு அடையாளம் ஓர் ஊருணி என்பது அவர்களின் அந்நாளைய தாரக மந்திரம். இல்லையா….. கவலை வேண்டாம் ஊருக்கு ஒரு கோவில் அதில் ஒரு குளம்……. இதனை எல்லாம் மேற்பார்வை பார்க்க அதிகாரிச்சிகள்……… ஆம் பெண்கள் நிர்வாகம் செய்து இருக்கிறார்கள். ஆண்கள் கிராம நிர்வாகம். ஆனால் பெண்கள் சபை நிர்வாகம். அதாவது நிலம் தொடர்பான அத்தனை விஷயங்களும் இவர்கள் வசம். இதிலும் நுட்பமான அவதானிப்பு இருக்கிறது. ஓர் ஆண் எந்நேரமும் போர் களம் புக வேண்டிய கட்டாயம் அந்நாளில் இருந்ததால் இத்தகையதொரு ஏற்பாடு. இப்படி தான் நிர்வாகம் பார்த்து இருக்கிறார்கள் நம்மவர்கள்.

இதனால் தான் உலக அளவில் நம் தமிழகத்தில் ஏராளமான கோவில்கள் அதனை சார்ந்த கோவில் இடங்கள் இருக்கின்றன. கோவில்களில் தான் சபை நிர்வாகம் நடக்கும்…… சபையின் ஓர் அங்கம் உணவிடுதல்.

ஏனோ தெரியவில்லை……
இதன் மிச்ச சொச்சம் தான் போலும்…. இன்றளவும் பெண்கள் கோவிலுக்கு போவதை மற்றும் உணவு பரிமாறுவதை விரும்புவதற்கு……

இதனை எல்லாம் பார்த்து அதிசயித்து ஆடி போனார் தாமஸ் மன்றோ. இதே பாணியில் தானும் தனது நிர்வாகமும் இருக்க வேண்டும் என்று விரும்பினார்….. வெகு தீவிரமாக செயல்படுத்தினார். அந்நாளில் இன்றைய மலையப்ப ஸ்வாமி சித்தூர் மாவட்டத்தின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்ட காலத்தில் தானும் அந்த கோவிலுக்கு இதே பாணியில் நிலத்தை நிவேதனம் செய்து வைத்து அதனை கொண்டு மத்திய வேளையில் பெருமாளுக்கு நைவேத்தியமாக அனுதினமும் வெண் பொங்கல் ஹம்சிக்க ஏற்பாடு செய்ய……. இன்றளவும் திருமலை திருப்பதியில் மதியம் பதினோரு மணி வாக்கில் விஐபி தர்சனம் முன்பு மன்றோ பெயர் படிக்கப்பட்டு வெண் பொங்கல் சமர்ப்பிக்க படுகிறது. இதற்கு மன்றோ கங்காலம் என்றே பெயர். இதற்காக அந்நாளில் சித்தூரில் உள்ள சில கிராமங்களை நிவேதனம் செய்து கொடுத்த சாஸனமும் ஆவண காப்பகங்களில் பராமரிக்கப்படுகிறது.

கொஞ்ச நாளைக்கு முன்பு இந்த கங்காலத்தை கங்காளம் என்று எழுதி வைக்க…….கங்காளம் என்பதற்கு எலும்பு என்று பெயர்…… பொருள் வரும், சிறிய அளவிலான மண் பாத்திரத்திற்கு கலயம் அதுவே பெரியது என்றால் கங்காலம் என்று எடுத்து சொல்லி தேவஸ்தானத்தோடு போராடியது தனிக் கதை.

ள விற்கும், ல விற்கும் இடையே எத்தனை பெரிய பொருள் வித்தியாசம் ‌…..
நம் விஷயத்திற்கு வருவோம்.

சொத்து வரி இத்தனை தூரம் தற்போது அதிகரித்து இருக்கிறார்களே……. இது சரியா என்றால்….
இன்னமும் அணாவில் …… கிட்டத்தட்ட காலணா வில் கணக்கு பண்ணி வரி வசூல் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா…… அப்படி என்றால் வரி உயர்வு சரியா என்றால்…… அதுவும் இல்லை. காரணம் அணாவில் இருந்து ரூபாய்க்கு வருகின்றனர் என்றால் அது போலவே அளவீட்டு கருவிகள் மற்றும் முறைமைகள் மாற்றம் கொண்டு வந்து முறையாக வரி வசூல் செய்தால் இதனை காட்டிலும் அதிக அளவில் அரசுக்கு வருவாய் வரும். மக்களுக்கும் சுமை குறையும்…. தனிநபர் சொத்து என்பதற்காக ஏகப்பட்ட அழுத்தத்தை பொருளாதார சுமையை ஏற்றிட கூடாது.

ஆனால் இன்று உள்ள அளவைகளில்… அதனை கொண்ட ஆவணங்களில் ஏகப்பட்ட அழிச்சாட்டியம்…. அட்டகாசம் செய்து வைத்திருக்கிறார்கள். இஃது நம் தமிழகத்தில் தான் அதிக அளவில் இருக்கின்றன….. பல ஆட்சியாளர்கள் தொடத்தயங்கிய…… தொட பயந்த சமாச்சாரம் இது.
இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் அண்ணா அறிவாலயம் தான். அந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தே இல்லை…… ஆனால் எந்த மாதிரியான அரசு புறம்போக்கு நிலம் என்பதில் தான் ஏகப்பட்ட சிக்கலான சமாச்சாரம் வருகிறது.

இதற்கான ஆரம்ப புள்ளியும் 1970 களின் ஆட்சியாளர்களிடம் இருந்தே தான் ஆரம்பித்து இருப்பதாக அதே ஆவணங்கள் காட்டிக்கொடுக்கிறது என்பது தான் இதில் உள்ள சுவாரஸ்யமான நகைமுரண்.
மத்திய அரசு சொன்னதால் தான் இந்த வரி உயர்வு என்று இங்கு உள்ள ஆட்சியாளர்கள் சொன்னால்…….. அது வெகு நிச்சயமாக இவர்களாகவே போய் சிலந்தி வலையில் சிக்குண்டு இருக்கிறார்கள் என்று பொருள். பொறுத்திருந்து பாருங்கள் ஏகப்பட்ட விஷயங்கள் வெளி வரும்.
காசு கொடுத்தவர்களுக்கு எல்லாம் கடலை பட்டாணி போல் பட்டா கொடுத்து இருக்கிறார்கள் என்பதெல்லாம் தோண்டத்தோண்ட வெளிவரும் புதையலாக இருக்கப்போகிறது. 1890 களில் அதற்கு அடுத்த 1920 களில் உள்ள OSR மற்றும் RSLR ஆவணங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன….அவற்றை எல்லாம் மாற்ற முடியாது. அதன் அடிப்படையில் சரிபார்த்தால் பல பெருச்சாளிகள் வெளிவரும்…… சில பல லட்ச சதுரடி….. சதுர மீட்டர்……. சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலங்கள் ஆவணங்கள் அடிப்படையில் பார்த்தால் காணாமல் போனதாக அறிவிக்க வேண்டி வரும்…….

போகப் போக தான் தெரிய போகிறது ஆட்சியாளர்களுக்கு, வரி உயர்வு என்கிற பெயரில் வரியோடிய புலியின் வாலை பிடித்து விட்டோம் என்பது. இனி விடவும் முடியாது. பின் வாங்கவும் முடியாது. எப்படியோ நிஜம் தெரிந்து தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறந்தால் சரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here