சிதம்பரத்தில் குவிந்த சிவனடியார்கள்!அதிரும் தமிழக அரசியல்!!

தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது சமீப காலங்களில் நிரூபணமாகி வருகிறது. திமுக அரசின் ஓராண்டு நிறைவு குறித்த கருத்துக்கணிப்பை பிரபல சிஓட்டர்ஸ் அமைப்பு எடுத்தது. அதில் 2024ல் பிரதமர் வேட்பாளர் சாய்ஸ் யார் என்ற கேள்விக்கான பதிலில் முதலிடம் பிடித்திருப்பவர் பிரதமர் நரேந்திரமோடி.
பிரதமரின் பாகுபாடுபார்க்காத வளர்ச்சித்திட்டங்களும், அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜகவினர் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கின்றனர்.

இதையெல்லாம் நிரூபிக்கும் வகையில் தமிழக அரசுக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியை திமுக தலைமை வியப்புடன் பார்க்கிறது. திருவாரூரில் தேரோடும் வீதிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அதற்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்திற்கு பல ஆயிரம் பேர் திரண்டு திருவாரூரை ஸ்தம்பிக்க வைத்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும், இவர்களை கிராமம் கிராமாக தொடர்ந்து சென்று பாஜகவினர் திரட்டியுள்ளனர் என்றும், வழக்கமான அரசியல் கட்சியினர் அழைத்து வரும் பிரியாணி, குவார்ட்டர் கூட்டம் இல்லை என்றும் உளவுத்துறையினர் அளித்த அறிக்கை, முதல்வர் ஸ்டாலினை சிந்திக்கத் தூண்டியது. இதைத்தொடர்ந்து சத்தமில்லாமல் கருணாநிதி பெயர் வைக்கும் முடிவை திரும்ப பெற்றுள்ளது ஆளுங்கட்சி.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அதுவரை அவருக்கு ஆதரவாக ஊடகத்துறையில் மறைமுகமாக செயல்பட்டு வந்த பத்திரிகையாளர்கள், யூடியூபர்கள் என்று வரிசையாக சந்தித்தனர். அதில் ஒருவன் யு2புரூட்டர்ஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் மைனர் என்பவன், ஹிந்துக்கள் போற்றி வணங்கும் சிதம்பரம் நடராஜர் குறித்து ஆபாசமாக பதிவினை வெளியிட்டான். மதப்பதட்டத்தை உருவாக்குபவர்கள் மீது எந்த பாகுபாடும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலின் இவன் மீது மட்டும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையில் பல புகார்கள் அளித்த நிலையிலும் இன்னும் சுதந்திரமாக உலவி வரும் அவன், மேலும் பலரை விமர்சித்து பதிவிட்டு வருகிறான்.

இவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சிதம்பரத்தில் சிவனடியார்கள் நேற்று பிரமாண்ட போராட்டம் நடத்தினர். இதில் பல ஆயிரம் பேர் திரண்டிருப்பது ஆளுங்கட்சியை அதிர வைத்துள்ளது. திமுக ஹிந்துக்களுக்கு எதிரான ஆட்சி நடத்துகிறது, ஹிந்து மதத்திற்கு எதிராக விஷம் கக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை, ஆனால் பிற மதத்தவர்கள் மீது சட்டரீதியாக பேசினால் கூட குண்டர் சட்டத்தில் அடைக்கிறது என்ற எண்ணம் தமிழர்கள் மத்தியில் பதிந்துவிட்டதன் எதிரொலியே இந்த இரு போராட்டங்களிலும் திரண்ட கூட்டம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

யு2புரூட்டர்ஸ் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா அல்லது, சிவனடியார் போராட்டத்தை மேலும் வலுவடையச் செய்யுமா என்பது இப்போதுள்ள கேள்வி. அரசியல் லாபத்தை கணக்கிட்டே காய் நகர்த்தும் திமுக, சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டவனை சிறைக்கு அனுப்பவே அதிக வாய்ப்பு என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here