மூன்றாம் பாலினத்தவர்ளுக்கான வெப்சைட்!

மூன்றாம் பாலினத்தவர்கள் வாழ்க்கை நடத்துவது என்பது அவ்வளவு சுலபமல்ல. கேலி, கிண்டல், வெறுப்பு, அவமானப்படுத்துதல் என்று அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை ஏராளம். ஆனால் நம் பாரத தேசத்தில் மூன்றாம் பாலினத்தவர்களும் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். உதாரணமாக மகாபாரதத்தில் அர்ஜூனன் ஒரு ஆண்டு மூன்றாம் பாலினத்தவராக வாழ்ந்ததை கூறலாம். தமிழகத்தில் கூவாகத்தில் நடக்கும் அரவான் விழாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் யாருக்கும் தாழ்ந்தவர்களில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
நம் மண்ணில் பாலின வேறுபாடுகள் இருந்ததில்லை. ஆனால் முகாலாயர்கள் ஆக்கிரமிப்பின் போது, மூன்றாம் பாலினத்தவர்களை மிக மோசமாகவும், அடிமைகளாகவும் நடத்தப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாலினத்தவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதும், அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக திசை மாறுவதும் நடந்து வருகிறது. இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டு, இருபாலினத்தவர்களுடன் போட்டிபோட்டு உயர்ந்த நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நடைமுறை சிக்கல்கள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக அவர்கள் தங்கள் சலுகைகளையும், உரிமைகளையும் பெற அடையாள அட்டை அவசியம். சிறுவயதில் எடுக்கப்பட்ட அடையாள அட்டையில் பிறப்பு பாலினமே குறிக்கப்பட்டிருக்கும். பாலின மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர், அவர்கள் அடையாள அட்டை பெறுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தற்போது மத்திய அரசு இந்த குறையை போக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென சமூகநலத்துறை அமைச்சகத்தின் மூலம் பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியுள்ளது. அதில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் எளிதில் அடையாளஅட்டையை பெற்றுக் கொள்ள முடியும். அத்தோடு மூன்றாம் பாலினத்தவர்களுக்காக உள்ள வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றின் பலன்களையும் அடைய முடியும்.
அனைத்து தரப்பினரின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி!!

WEBSITE: http://transgender.dosje.gov.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here