இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு எமீரேட்ஸில் (யுஏஇ) இதுவரை வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரு நாட்கள் வார விடுமுறையாகவும், ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக, பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி உள்ளிட்ட பல்வேறு மதரீதியான கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் இந்த நாடு, இப்போது வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதை மாற்றி சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் வார விடுமுறையாக இருக்கும் என்றும் இது ஜனவரி முதல் வாரத்திலிருந்து அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் விடுப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.