மாட்டிறைச்சி சாப்பிட மறுத்தவரை அடித்து உதைத்ததாக புகார்! மதத்தலைவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லீம் மத குருவான மௌலானா கலீம் சித்திக் கடந்த செப்டம்பர் மாதம் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இவர் நடத்தும் ஜாமியா இமாம் வலியுல்லா என்ற அறக்கட்டளை வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதி உதவி பெற்று, அதன் மூலம், திருமணம், வேலை, பணம் போன்ற ஆசைகளை காட்டியும், மன அழுத்தத்தை ஏற்படுத்தியும் கட்டாய மதமாற்றம் செய்ததாக உத்திரபிரதேசமாநில ஏடிஎஸ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கலீம் சித்திக் வீடு, டில்லி ஷாஹீன் பாக் பகுதியில் அமைந்துள்ள அவரது அமைப்புகளான குளோபல் பீஸ் சென்டர் மற்றும் வேர்ல்ட் பீஸ் ஆர்கனைசேஷன் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனிடையே மௌலானா கலீம் சித்திக்கால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட ஒருவர், தனக்கு 4 லட்சம் ரூபாய் கொடுத்து கட்டாய மதமாற்றம் செய்ததாகவும், தன்னை மாட்டிறைச்சி சாப்பிட வற்புறுத்தி அடித்து, உதைத்தாகவும் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாகவும் சித்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முசாபர்நகர் மாவட்டம் சார்தவால் பகுதியைச் சேர்ந்த அமித் பிரஜாபதி என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். அந்த புகாரில் 2014-ம் ஆண்டு பர்னிச்சர் ஷோரூம் ஒன்றில் ஹாஜி கலீம் சித்திக்கை சந்தித்தேன். அவர் நட்புடன் என்னிடம் பழகினார். அந்த ஆண்டு மே மாதம் என்னை ஃபுலாத் மதர்சாவுக்கு அழைத்துச் சென்று இஸ்லாத்திற்கு மாற்றினார். அதற்காக 4 லட்சம் ரூபாய் பணம் அளித்தார். விருப்பப்பட்ட பெண்ணுடன் திருமணம் செய்வதாக உறுதியளித்து மதமாற்றினார். மதமாற்றத்திற்குப் பிறகு எனக்கு அப்துல்லா என்ற பெயர் சூட்டப்பட்டது. பின்னர் மகாராஷ்ட்ராவில் உள்ள ஜமாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இஸ்லாமிய வழிபாட்டு முறைகள் கற்றுத்தரப்பட்டது. இதற்காக அங்கு 40 நாட்கள் தங்கியிருந்தேன். பின்னர் இன்னொரு இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு உருது, அரபி கற்றுத் தந்தனர்.
இதற்கு பிறகு இளைஞர்கள், பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் வற்புறுத்தி பிற மதங்களை தாக்கி பேசச்செய்து வீடியோ எடுத்து தனது யூடியூப் சேனலில் சித்திக் பதிவிட்டுள்ளார்.

ஹாஜி கலீம் அவரது கூட்டாளிகள், தில்ஷாத், ஜாஹித் முல்லா, நௌஷாத் சோட்டா, யாமீன், இஸ்ரார் பிரதான் ஆகியோர் என்னை சந்தித்தனர். அப்போது அவர்கள் டிபன் பாக்ஸ் ஒன்றில் மாட்டிறைச்சியைக் கொண்டு வந்தனர். அதை சாப்பிடும் படி வற்புறுத்தினர். நான் மறுத்ததால் கடுமையாக என்னை தாக்கியதோடு, மாட்டிறைச்சியை சாப்பிடாவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர் என்று கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: OpIndia

பின் குறிப்பு: சிறுபான்மையினர் மீது சிறு கீறல் விழுந்தாலும் நம்ம ஊர் தமிழ்சேனல்கள் பல வாரங்கள் விவாதங்களை நடத்தும். மாட்டிறைச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தால் என் உணவு என் உரிமை என்று புரட்சிக் குரல் எழுப்புவார்கள். அதே சமயம் பிரஜாபதி என்ற இந்துவை மாட்டிறைச்சி சாப்பிட வற்புறுத்தி அடித்து உதைத்த புகார் குறித்து இவர்கள் இதுவரை வாய்திறக்கவில்லை. திறக்கவும் மாட்டார்கள்.

1 COMMENT

  1. இந்து என்றால் கேட்க நாதியில்லை…. ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here