உ.பி. கலவரத்தின் பின்னணி என்ன?

உத்திரபிரதேச மாநிலம் லக்கீம்பூரில் நடந்த கலவரத்தில் 8 பேர் பலியானார்கள். இதில் ஒரு பத்திரிக்கையாளர் உட்பட 4 பேர் கொடூரமாக அடித்தே கொலை செய்யப்பட்டனர். போராட்டக்காரர்கள் 4 பேர் பலியானார்கள். இவர்கள் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகனின் கார் மோதி பலியானதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். இப்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் உத்திரபிரதேசத்தில் முகாமிட்டுள்ளனர். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், சத்தீஸ்கர் முதல்வர்களும் தங்கள் மாநில நிர்வாகத்தை மறந்துவிட்டு, உத்திரபிரதேசத்தில் முகாமிட்டு பலியானவர்களில் 4 போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கு மட்டும் தங்கள் மாநில அரசுகள் சார்பில் தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். ஆனால் கொடூரமாக மனிததன்மையற்று அடித்தே கொல்லப்பட்ட மற்ற 4 பேர் குறித்து இவர்கள் வாய் திறப்பதில்லை. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தலைவர்களும் போராட்டக்காரர்கள் 4 பேர் பலியானது குறித்து மட்டுமே கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மற்ற 4 பேர் அடித்துக் கொல்லப்படும் வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையிலும் அது குறித்து வாய் திறக்கவில்லை. நம்ம ஊர் திருமாவளவன் ஒரு படி மேலே சென்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று புரட்சி குரல் எழுப்பியுள்ளார்.

உண்மையில் லக்கீம்பூரில் நடந்தது என்ன?

காங்கிரஸ் கட்சி துண்டு துண்டாக எடிட் செய்து வெளியிட்ட வீடியோவிலேயே நடந்த சம்பவங்களை புரிந்து கொள்ள முடிகிறது. ரோட்டில் வந்து கொண்டிருக்கும் கார்களை தடுத்து நிறுத்தும் போராட்டக்காரர்கள், கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்குகின்றனர். பின்னர் காரில் உள்ளவர்களை தாக்க முற்படுகின்றனர். அப்போது தாக்குதலில் இருந்து தப்பிக்க கார் டிரைவர் காரை ஓட்டிச்செல்கிறார். ஓடும் கார்களை தடுக்க முயலும் போராட்டக்காரர்கள் மீது கார்கள் மோதுகின்றன. இந்த கார்களில் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் இருந்ததாக எந்த ஆதாரத்தையும் காங்கிரஸ் வெளியிடவில்லை. ஆனால் அதற்கு பின்னர் வெளியான காட்சிகள் கொடூரமானவை. காரை விரட்டிச் சென்று பிடிக்கும் போராட்டக்காரர்கள், காரில் இருந்தவர்களை வெளியில் இழுத்துப்போட்டு கொடூரமாக ஆயுதங்களால் தாக்குகின்றனர். குறிப்பாக கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே தலையில் தாக்கப்படுகின்றனர். அவர்கள் உயிரிழந்ததும் கார்கள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இந்த தாக்குதலை நடத்திய கொடூரர்கள் குறித்து ஆங்கில செய்தி சேனல்களில் தொடர்ந்து காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. தமிழக செய்தி நிறுவனங்களோ 8 விவசாயிகள் பலி, அமைச்சர் மகன் கார் ஏற்றி 4 விவசாயிகள் கொலை, உத்திரப்பிரதேசம் போர்களம் ஆகிறது என்று தங்கள் விருப்பப்படி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

நாடு முழுவதும் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்த கடைசி நம்பிக்கையாக கடந்த தேர்தலின் போது பிரியங்காகாந்தி களம் இறக்கப்பட்டார். ஆனால் அதிலும் வெற்றி கிடைக்கவில்லை. 2014 தேர்தலில் 2 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற அக்கட்சி 2019 ல் ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. ராகுல்காந்தி பாஜகவின் ஸ்மிருதிராணியை சமாளிக்க முடியாமல் கேரளாவின் வயநாட்டிற்கு ஓடி எம்.பி ஆனார். இப்போது அக்கட்சிக்கு உத்திரபிரதேசத்தில் சோனியாகாந்தி என்ற ஒரே ஒரு எம்பி மட்டுமே இருக்கிறார். ஆனால் மத்தியில் பாஜகவை ஆட்சியில் அமர்த்த 2014, 2019 ஆகிய இரு தேர்தல்களிலும் 60 க்கும் மேற்பட்ட எம்பிக்களை கொடுத்துள்ளது. விரைவில் நடக்கவுள்ள உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜகவை தோற்கடித்துவிட்டால், அடுத்து 2024 ல் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் உத்திரபிரதேசத்தில் வெற்றி பெற்று, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுத்துவிடலாம் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிடுகின்றன. ஆனால், உத்திரப்பிரதேச யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசோ, இந்த பிண அரசியல் குறித்து கவலைப்படாமல், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி புகார்கள் மீது பாகுபாடின்றி வழக்குகளை பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் திறமையாக தடுத்து நிறுத்தியுள்ளது.

நடக்கும் நிகழ்வுகளை காணும் பொதுமக்களுக்கு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகளிடமும், ஒரு சார்பு ஊடகங்களிடமும் கேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன. ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதில் சொல்வது முக்கிய கடமை சொல்வார்களா?

1.மாமிசத்திற்காக மாடு திருடியவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றபோது கொதித்த நீங்கள் போராட்டம் என்ற பெயரில் 4 பேரை கொடூரமாக அடித்துக் கொன்ற வீடியோ வெளியான பின்னரும் அது குறித்து மௌனம் காப்பது ஏன்?

  1. மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் எஸ்டி இன பெண்களை குறிவைத்து பாலியல் பாலாத்காரம், கொடூர கொலைகள் என்று திரிணாமூல் தொண்டர்கள் என்ற பெயரில் நடந்த கொடூர சம்பவங்கள் குறித்து வாய் திறக்காத நீங்கள், தற்போது பொங்குவது ஏன்?
  2. போராட்டக்காரர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் போது, பஞ்சாபில் போராட்டம் நடத்தாமல் பாஜக ஆளும் ஹரியானா, உத்திரபிரதேச மாநிலங்களை போராட்டக்களமாக்குவது ஏன்?
  3. உ.பி மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகை அறிவித்துள்ள நிலையில், பஞ்சாப், சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் போட்டி போட்டுக் கொண்டு நிவாரணத் தொகை அறிவிப்பது ஏன்?
  4. பிணங்களை வைத்து அரசியல் செய்யும் கொடூர மனநிலையை எப்போது கைவிடுவீர்கள்?
  5. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டபோது தாலிபான்களுக்கு வலிக்காத வகையிலாவது எதிர்ப்பு தெரிவித்து அஞ்சலி கூட்டம் நடத்திய தமிழக பத்திரிக்கையாளர்களே… உ.பியில் சக பத்திரிக்கையாளர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து உங்கள் வாய் கூட முணுமுணுக்காமல் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்?

சொல்வீர்களா? பதில் சொல்வீர்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here