திட்டமிட்ட ரீதியில் சீன வைரஸ் பரவியபோது உலகமே அதிர்ந்து போனது. ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் அழிவு ஏற்பட்டுவிடுமோ என்று உலக நாடுகள் அஞ்சி நடுங்கின. ஆனால் சீனா மட்டும், தடுப்பூசி, முகக்கவசம், ஆக்ஸிஜன் செரிவூட்டிகள் போன்றவற்றை பல மடங்கு தயாரித்து வைத்துக் கொண்டு, உலக நாடுகளின் செல்வங்களையெல்லாம் அள்ளி குவித்திட துடித்துக் கொண்டிருந்தது.
உலகின் முன்னணி தடுப்பூசி நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுப்பிடித்து கொள்ளை லாபம் பார்க்க தீவிரம் காட்டின. ஆனால் இந்தியா தடுப்பூசி கண்டுப்பிடிக்கும் என்று அவர்கள் யாரும் கனவில் கூட எதிர் பார்க்கவில்லை. ஆனால் வலுவான தலைமையுள்ள இந்தியா, சாதித்துக்காட்டியது. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளை இந்தியாவிலேயே தயாரித்து உலகை அதிரடித்தது. ஆம். உலகின் தடுப்பூசி தயாரித்த 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா தடுப்பூசிக்கு தங்களிடம் கையேந்தும், அதில் இந்தியாவின் ஒட்டுமொத்த செல்வத்தையும் சுரண்டிவிடலாம் என்று காத்திருந்த சீனா, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு இது முதல் அதிர்ச்சி என்றால், உள்நாட்டில் இருக்கும் வெளிநாட்டு கைகூலிகளுக்கும் இது அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அத்தோடு தடுப்பூசி கண்டுப்பிடித்து பிரதமர் நரேந்திரமோடி மக்களிடம் செல்வாக்கை பெற்றுவிடக்கூடாது என்று அஞ்சிய எதிர்கட்சிகள் தடுப்பூசி குறித்து சந்தேகம் கிளப்பின. ராகுல்காந்தி முதற்கொண்டு, ஸ்டாலின், திருமாவளவன், கெஜ்ரிவால், அகிலேஷ், மம்தா என்று இந்த பட்டியல் நீண்டது. தமிழகத்தில் ஒரு படி மேலே சென்று சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அப்பாவி மக்களிடம், தடுப்பூசி போட்டால் இறந்துவிடுவீர்கள் என்று படுகேவல பிரச்சாரமும் நடந்தது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள பிரதமர் அழைப்பு விடுத்தும் எதிர்கட்சிகளின் பிரச்சாரத்தால் மக்கள் தயங்கவே… மோடி ராஜதந்திர நடவடிக்கை எடுத்தார். பல ஏழை நாடுகளுக்கு நாம் தயாரித்து வைத்திருந்த தடுப்பூசிகளை இலவசமாகவே அனுப்பி வைத்தார். அனுமன் சஞ்சீவி மலையை கொண்டு வந்தது போல இந்தியா நமக்கு தடுப்பூசி அளித்திருக்கிறது என்று தாய்வான் போன்ற நாடுகள் நன்றிக்கடனுடன் பாராட்டின.

நாட்டில் இரண்டாம் அலை வந்தது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது அதிலும் அரசியல் செய்ய எதிர்கட்சிகள் முயற்சித்தன. ஆனால் தடுப்பூசி பெற்ற பல நாடுகள் இலவசமாகவே ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும், செரீவூட்டிகளையும் அனுப்பி வைத்தன.
இரண்டாம் அலையை வெற்றிகரமாக எதிர்கொண்டது பாரதம். மக்கள் மத்தியில் தடுப்பூசி போடும் ஆர்வத்தையும் தூண்டியது. சில மாதங்களுக்கு முன்பு தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சிகள் தடுப்பூசி பற்றாக்குறை என்று அரசியலில் இறங்கினர். அதையும் வெற்றிகரமாக சமாளித்தார் மோடி. தடுப்பூசி விலை குறித்து அரசியல் செய்ய முற்படும் எதிரிகளுக்கு, அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி என்று அறிவித்து மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார் மோடி.
இப்படி பல தடைகளை தாண்டி தடுப்பூசி போடும் பணி இன்று உலக சாதனையை புரிந்துள்ளது. ஆம் 100 கோடி தடுப்பூசிகளையும் தாண்டி போட்டு நாடு சாதித்துள்ளது. சீனா 200 கோடி தடுப்பூசிகளை போட்டுவிட்டதாக கூறிக் கொண்டாலும், ஆதாரப்பூர்வமான தகவலை இதுவரை அளிக்கவில்லை. ஆனால் இந்தியா, இன்று 71 கோடி முதல் டோஸ்கள், 30 கோடி இரண்டாம் டோஸ்களை போட்டு, நூறு கோடியே 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை போட்டு சாதனை புரிந்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 58 கோடி டோஸ்கள் மட்டுமே போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்தியா தனது ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசிகளை போட்டு சாதனை புரிவதோடு, நூற்றுக்கணக்கான நாடுகளுக்கும் தடுப்பூசி கொடுத்து காக்கவுள்ளது. இனி எந்த பெருந்தொற்று வந்தாலும் இந்தியா தனது சொந்தகாலில் சமாளிப்பதோடு, உலகையும் காப்பாற்றும். இந்த வரலாற்று சாதனைக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசும், தடுப்பூசி தயாரித்த நிறுவனங்களும், சுகாதாரத்துறையினரும், ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களும் சொந்தக்காரர்கள் என்பதை மறுக்க முடியாது.