திருவள்ளுவர் ஹிந்துவே!

நாத்திக தோழரின் கேள்வியும், இந்துவனின் பதிலும்

தோழர் : ஆங்கிலேயர்கள் இல்லைனா திருக்குறளை நாம படிச்சிருக்கவே முடியாது தெரியுமா? திருக்குறளை முதலில் அச்சேற்றம் செய்தவர் எல்லீஸ் என்பவர்தான் இது தெரியுமா ப்ரோ?

நான் : அண்ணே எல்லீஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்பதும் அச்சேற்றம் செய்தார் என்பதும் உண்மைதான். (இதற்கும் சேதுபிள்ளை என்பவரின் உதவியும் வேண்டியிருந்தது) ஆனால் எல்லீஸ் திருக்குறளை அச்சேற்றம் செய்வதற்கு ஓலைச்சுவடிகளை வழங்கியவர் திரு கந்தப்பன் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா அண்ணே?

தோழர் : என்ன ? எல்லீசுக்கு திருக்குறள் சுவடிகளை தந்தவர் தமிழரா?

நான்: ஆம். அதுமட்டுமல்லாது எல்லீசும் தனது மொழிபெயர்ப்பில் திருவள்ளுவரை சமணராகவோ கிறிஸ்தவராகவோ எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால் 1796 ஆம் ஆண்டு எல்லீஸ் முதன் முதலில் திருக்குறளை அச்சேற்றம் செய்வதற்கு முன்பே கின்டர்ஸ்லே என்பவரால் 1794 ஆம் ஆண்டு எழுதப்பட்ட Specimens of Hindoo literature எனும் நூலில் திருக்குறள் பற்றி குறிப்பிட்டுள்ளார்..!

மிக முக்கியமாக இந்துக்களின் வழிபாட்டு முறைகளை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்த நூலில் #திருக்குறளை இந்துக்களின் நூல்களின் பட்டியலில் தான் அட்டவணைப்படுத்தியுள்ளார்கள். ஆக திருவள்ளுவரை முதன் முதலில் இந்துவாக அறிவித்தது 1794 ஆம் ஆண்டு ஆங்கிலேயன்தான். அதாவது 1794 க்கு முன்பு திருக்குறளும், திருவள்ளுவரும் எந்நிலையில் மக்களிடம் அறிமுகமாகியதோ அதே நிலையைத்தான் வெள்ளைக்காரனும் திருவள்ளுவருக்கு கொடுத்திருக்கிறான்…!

தோழர் : அது சரி 18 ஆம் நூற்றாண்டிற்கு முன் இந்த தமிழ் சமூகம் திருவள்ளுவரை ஏன் அறிந்திருக்கவில்லை???

நான்: அப்படி உங்களுக்கு யாரு சொன்னது அண்ணே?? குளத்தூர் சோமேசர் முதுமொழி வெண்பா என்றொரு நூல் உண்டு. குளத்தூர் என்பது சென்னை பெரம்பூர் அருகே உள்ள ஒரு கிராமம். இங்கு கோயில் கொண்டு உள்ள ஸ்ரீ சோமேஸ்வரரை முன்னிலைப்படுத்தி 16 நூற்றாண்டில் அதாவது இன்றைக்கு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் பாடிய நூலே இது. இந்நூலில் சிறப்பு என்னவெனில் இந்நூல் திருக்குறளை மையமாக வைத்து பாடப்பட்டதாகும்.

அதோடு 13 ம் நூற்றாண்டில் சைவசித்தாந்த நூல்களில் ஒன்றான நெஞ்சுவிடு தூது என்ற நூலில் உமாபதி சிவாச்சாரியார் திருக்குறளையும் திருவள்ளுவரையும் மேற்கோளிட்டுள்ளார் என்பதே திருவள்ளுவர் ஓர்  சைவ சித்தாந்தவாதி என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாகும்…!

‘தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றையவ ரென்று-நிலைத்தமிழின்

தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல்லை விரும்பாமல்‘

– நெஞ்சுவிடு தூது.

அதோடு 8 ஆம் நூற்றாண்டில் அதாவது இன்றிலிருந்து 1200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருக்குறளை ஏந்திப் பாடி இருப்பது அவர் ஓர் சைவ சித்தாந்தி என்பதை உணர்த்துவதாகவே உள்ளது. அதாவது

‘மற்றேல் ஒருபற் றிலனம் பெருமாள் வண்டார் குழலான் மங்கைபங் கினனே அற்றார் பிறவிக் கடல் நீந்தி யேறி அடியேனுய் யப்போவ தோர்குழல் சொல்லே‘

இங்கு சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவள்ளுவரின் 10 ஆவது குறளை சுட்டிக்காட்டி இருப்பது கவனிக்கத்தக்கது. இது எட்டாம் நூற்றாண்டு. இப்படி திருவள்ளுவரையும் திருக்குறளையும் ஔவையார், பெருந்தேவனார் முதலான பல சங்கப்புலவர்களே மக்களிடம் கடத்தி வந்திருக்கும்போது 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு மக்கள் திருவள்ளுவரையும் திருக்குறளையும் அறிந்திருக்கவில்லை என்பது ஆகச்சிறந்த கட்டுக்கதை…!

கேள்வி : திருக்குறளை மிகப் பழமையான வேதங்களுடனும் இதிகாசங்களுடனும் தொடர்புபடுத்தியவர் யார்?

பதில் : சங்கப்புலவர்களில் ஒருவரான பாரதம் பாடிய பெருந்தேவனார்.

கேள்வி : இதற்கு என்ன ஆதாரம்?

பதில் : திருவள்ளுவ மாலை.

‘எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச் செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் – முப்பாற்குப்

பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை நேர்வனமற் றில்லை நிகர்‘

– திருவள்ளுவ மாலை.

பொருள் : எந்த பொருளானாலும் யாரும் இயல்பாக அறிந்து தெளியும்படி திருவள்ளுவர் சொல்லால் வரைந்த திருக்குறளுக்கு உவமானமானவை பழமையான வேதங்கள், மனுஸ்மிருதி, மகாபாரதம், இராமாயணம் போன்றவை

திருவள்ளுவதேவ நாயனார் அருளிய திருக்குறள்  மதுரை ஸ்ரீ சொக்கநாதர் கோவிலில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது. தமிழ் புலவர்களில் முதன்மையானவராக சிவபெருமானே உள்ளார். இவருக்கு இறையனார் என பெயர் கொண்டு இலக்கியங்களில் அழைக்கப்படுகின்றார். இவரோடு சேர்த்து சங்கப்புலவர்களின் சன்னதியே இக்கோவிலில் உள்ளது. அதில் சிவபெருமானோடு அனைத்து தமிழ் புலவர்களும் உள்ளார்கள். திருவள்ளுவ நாயனாரும் உள்ளார் என்பதே இக்கோவிலின் சிறப்பு…!

இவர்களுக்கு இவ்வாலய சிவாச்சாரியார்கள் நித்ய பூஜை  செய்துவருகிறார்கள் திருக்குறள் மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பொற்றாமரைக் குளத்தில் ‘சங்கப் பலகை‘யில் வைத்து அரங்கேற்றம் செய்யப்பட்டதை, போற்றும் விதமாக  1330 திருக்குறளையும் சலவைக் கல்லில் செதுக்கி கோவிலின் பொற்றாமரை குளத்தின் தென்பக்க சுவரில் பதித்துள்ளனர். இவ்வாறு சங்க இலக்கிய புலவர்களையும், திருக்குறளையும் போற்றும் ஆலயமாக மதுரை திருத்தலம் விளங்குகின்றது….!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here