வீர்சக்ரா விருது பெற்ற ஹவில்தார் பழனி, குரூப்கேப்டன் அபிநந்தன்! சூர்யாக்கள் விவகாரத்தில் மீடியாக்கள் பிஸி!!

தமிழக மக்கள் இரு தினங்களுக்கு முன்பு இரு நபர்கள் குறித்து தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். கரோனா வைரஸை பரப்பி உலக மக்களை மிகப்பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கிய சீனாவை எப்போதும் ஆதரிக்கும் கம்யூனிஸ்ட்டுகளை போற்றி படம் எடுத்து, அதில் ஜாதி வெறியை திணித்து கோடிகளை குவித்துக் கொண்டிருக்கும் ஒருவர். மற்றொருவர், சமூகவலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பரப்பி, அதன் மூலம் பணம் பார்த்த பெண் ஒருவர், மோசடி செய்வதாக பல பெண்கள் புகார் அளித்த விவகாரம். இருவரது பெயரும் ஒன்று தான் ‘சூர்யா’. ஒருவர் ஆண், மற்றொருவர் பெண். இது தான் வித்யாசம்.
ஆனால் தமிழகத்தில் உண்மையாக கொண்டாட வேண்டிய இருநபர்களுக்கு நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. அது நம்ம ஊர் மீடியாக்களால் கண்டு கொள்ளாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒருவர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 18 வயதில் ராணுவத்தில் சேர்ந்து 22 ஆண்டுகள் நாட்டுக்காக சேவையாற்றியவர். கொடூர சீனர்கள், கல்லால் செய்யப்பட்ட கொடூர ஆயுதங்களுடன் கல்வான் பள்ளத்தாக்கில் ஊடுறுவிய போது, வெறும் கைகளாலேயே பலரை அடித்துக் கொண்டு வீரமரணம் அடைந்த ஹவில்தார் பழனி. மற்றொருவர் பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்து சென்று எதிரியின் விமானத்தை வீழ்த்தி, எதிரியிடம் சிக்கிய போதும் மனம் தளராமல் மீண்டு வந்த அபிநந்தன்.
அபிநந்தன் ஜனாதிபதியிடம் சென்று வீர்சக்ரா விருதை பெற்றார். ஆனால் ஹவில்தார் பழனியின் மனைவி இருக்கும் இடம் வந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீர்சக்ரா விருதை வழங்கி கவுரவித்தார். பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தளபதிகள் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.
ஹவில்தார் பழனியின் மனைவி வானதிதேவி, தன் மகன் பிரசன்னா, மகள் திவ்யாவுடன் விருதுபெற டில்லி வந்திருந்தார். அவரிடம் ஒரு டிவி நிருபர் பேட்டி எடுத்தபோது, பழனியின் தியாகத்திற்கு உரிய அங்கீகாரத்தை இந்திய அரசு தந்திருக்கிறது. இதற்காகத் தான் காத்திருந்தேன். எங்கள் குடும்பத்தை அரசு நன்றாக கவனித்துக் கொள்கிறது. நாங்கள் எப்படியிருக்கிறோம், என் குழந்தைகள் படிப்பு என்று அனைத்தையும் ராணுவ அதிகாரிகள் கவனித்துக் கொள்கிறார்கள் என்று கூறினார்.
இந்த விருது பெற்ற வைபவத்தை தமிழகமே கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் தமிழக மீடியாக்களுக்கு கூத்தாடிகள் பிரச்சனை தான் பெரியதாக தெரிகிறது. ஹவில்தார் பழனியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கூறினார், ‘தமிழகத்தில் நடிகர், நடிகைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இங்கு பாகிஸ்தான், சீனா போன்ற எதிரிநாடுகள் எல்லையில் இருந்து, எதிரிநாட்டவர்கள் அவ்வப்போது குண்டுகளை வீசி பலரையும் கொன்று கொண்டிருந்தால், அவர்களிடமிருந்து நம்மை காப்பாற்றும் ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள் மீது மதிப்பு வந்திருக்கும்‘
உண்மை தானே?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here