இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மின்னிய மாமேதை விஸ்வேரய்யர்

ஒரு அறிவாளி தேசத்தின் தலைவிதியினை மாற்றுவான், மிக நுட்பமான மதிபடைத்தவன் தன் அபார தீர்கதரிசனத்தால் மிகபெரிய காரியங்களை செய்து மக்களை வாழ்வாங்கு வாழசெய்து வரலாற்றில் நிலைப்பான்

இந்த வரிக்கு மிக பொருத்தமாக வாழ்ந்தவர் விஸ்வேரய்யர், கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மின்னிய மாமேதை

இன்று கன்னட மாநிலம் மாபெரும் வளர்ச்சியுடன் நிற்கவும், அந்த ஒடுங்கிய காவேரி மைசூரின் மாண்டியா முதல் கன்னடமெங்கும் பச்சை செழிப்புடன் வாழவைக்கவும் அவர்தான் காரணம்

சென்னை சர்வதேச நகரமாக மின்னிய காலங்களில் வெறும் கிராமமாக இருந்த பெங்களூர் இன்று சர்வதேச அரங்கில் மின்ன அவரின் அடித்தளமேதான் காரணம்

இந்தியருக்கு எந்த ஆலையும் நிர்மானிக்க முடியாது என வெள்ளையன் ஏளனம் பேசியதை மாற்றி ரூர்கேலா முதல் மாபெரும் இரும்பு ஆலைகளை அமைத்தவர்

கட்டட பொறியியல் துறையில் இந்தியருக்கு பெரும் அடையாளம் தேடிதந்து அழியா கட்டடங்களை, ஆலைகளை, அணைகளை உருவாக்கினார்

அவரின் முக்கியமான சாதனை காவேரி குறுக்கே அணைகளை கட்டியது, அந்த வரலாறு சுவாரஸ்யமானது

தமிழகத்தை செழிக்க செய்த காவேரியில் முதல் பிரச்சினை சாளுக்கிய மன்னர்கள் வடிவில் வந்தது, அதுவும் சோழர்களுக்கும் அவர்களுக்கும் வந்த தகறாறு, ஆனாலும் சோழர்கள் உச்சத்தில் இருந்த நேரம், சாளுக்கியரை அடக்கி காவேரியை மீட்டார்கள்.

காரணம் காவேரி வற்றாத ஆறு அல்ல, சிறிய நதியாக புறப்படும் காவேரி தமிழக அமராவது, நொய்யல், பவானி என கூடித்தான் கல்லணை பக்கம் வரும்

கோடையில் இந்த ஆறுகள் வற்றிவிட்டால் காவேரி ஒடுங்கும், அந்த ஒடுங்கும் காவேரியினைத்தான் மண் அணையில் அடக்குவார்கள் சாளுக்கியர்கள், அதை சோழர்கள் உடைத்து காவேரியினை வறட்சியான காலங்களில் மீட்பார்கள்

சோழர் காலத்தில் காவேரிக்கு சிக்கல் இல்லை

அங்கு விஜயநகரபேரரசு உதயமாகி, மொகலாயரையே விரட்டும் அளவிற்கு வலுவானபோதும் காவேரியில் கைவைக்கவில்லை, காரணம் எந்த அவசியமும் இல்லை.

பின்னாளில் நாயக்கர் தமிழகம் வர அதில் பிரச்சினை வர வாய்ப்பே இல்லாமல் ஆயிற்று. வைகை கரை,காவேரிகரை எல்லாமே நாயகர்கள்.மைசூரிலும் நாயக்கர்கள் ஒரு பிரச்சினையும் இல்லை.

கவனியுங்கள், மைசூரிலிருந்து வந்து மதுரையிலும், தஞ்சாவூரிலும் சம்மணம் போட்டு அமர்ந்துகொண்டார்கள் என்றால், நாம் இங்கு உருவாக்கி வைத்திருந்த நன்செய் நிலங்கள் அப்படி, மைசூர் பக்கம் அன்றெல்லாம் ஒன்றுமில்லை.

மதுரை நாயக்கருக்கும், தஞ்சாவூர் நாயக்கருக்கும் வாரிசுசண்டை ஆரம்பித்தபொழுது, தஞ்சாவூர் நாயக்கர்களுக்கு ஆதரவாய் சிவசேனை வந்தது, சிவசேனா என்பது பால்தாக்கரே அல்ல, மாமன்னன் சிவாஜியின் உறவினர் படை.

காரணம் அவர்கள் வராவிட்டால் பிஜப்பூர் சுல்தான் தஞ்சாவூரில் அமர்ந்திருப்பார்.

இப்படியாக மராட்டியர் தஞ்சையை பிடித்ததும் , கொஞ்சம் உரசல் உருவாயிற்று. அது பின்னாளில் மைசூர் சமஸ்தானம் (அது திண்டுக்கல் வரை இருந்தது) சோழமண்டல மராட்டியர் பிரச்சினை என உருவாயிற்று.

மழை நன்றாக பெய்து காவேரி பொங்கி அதனால் நல் விளைச்சல் விளைந்தால் பிரச்சினை இல்லை.

ஆனால் வெள்ளத்தால் தஞ்சை டெல்டா அழிந்தால் அதற்கு மைசூர் அரசு தண்ணீரை அழிப்பதற்காகவே அனுப்புகின்றது என சில சர்ச்சைகள் எழுந்தன, ஆடிமழையில் அந்த தண்ணீரை எங்கு வைப்பது என அவர்களுக்கும் தெரியவில்லை

இதனாலே கன்னடத்தில் விவசாய நிலங்கள் பெருக்க மைசூர் சமஸ்தானம் திட்டமிட்டது, இவ்வளவிற்கும் கொஞ்சம் விவசாயம் தொடங்கி மைசூர் சமஸ்தானம் பொருளாதாரம் உயர்ந்த நேரம் அது

ஆனால் தஞ்சையில் வெள்ளத்தில் பயிர்கள் அழிந்தால் அதற்கு மைசூர் சமஸ்தானம் பொறுப்பு என ஒரு கருத்து உருவானது, மைசூர் மன்னர் நஷ்டஈடு தரவேண்டும் என்றெல்லாம் குரல்கள் வந்தன, அக்கால மைசூர் உடையார்களும் சில நேரங்களில் நெல்லாகவோ, விதை நெல்லாகவோ,பணமாகவோ கொடுக்க ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில் ஆங்கிலேயர் தஞ்சையை ஆளுகைக்குள் கொண்டுவந்தனர், மைசூர் சமஸ்தானம் அடங்க மறுத்தது, பழைய பிரச்சினையை பெரும் பிரச்சினையாக உருவாக்கினர் ஆங்கிலேயர்.

தஞ்சாவூரில் வெள்ளத்திற்கு மைசூர் அரசு நஷ்ட ஈடுகொடுக்கவேண்டும் என வாங்கியே கொடுத்தனர், தஞ்சை மக்களுக்கும் பொம்மை சாம்போஜிக்கும் ஏக மகிழ்ச்சி, விட்டால் பிரகதீஸ்வரர் ஆலயம் பக்கம் வெள்ளையருக்க்கு ஆலயமே எழுப்பியிருப்பர், ஏனோ செய்யவில்லை.

இது திப்பு சுல்தான் காலத்தில் நீடித்தது, அவனிடம் அதிக பணம் கோரி வெள்ளையன் தமிழக மன்னர்களை தூண்டிவிட சிக்கல் பெரிதானது

பின்னாளில் திப்பு வீழ்ந்து மைசூர் சமஸ்தானம் உடையார்கள் கைக்கு சென்றாலும் இச்சிக்கல் பெரிதானது, மாத மாதம் பெரும் பணம் தஞ்சைக்கு வந்தது

மைசூர் மன்னர் யோசித்தார்.

“இது காவேரி ஆறு, அதுவும் 4 ஆறுகள் கூட சேர்ந்து தமிழ்கம் செல்கிறது, அங்கும் பவானி, அமராவதி, நொய்யல் என எல்லாம் கலந்துதான் திருச்சி வருகின்றது, அங்கு அழிவென்றால் நான் பணம் கொடுக்கவேண்டுமாம்?

முப்போகம் விளைந்தால் நமக்கா தருகின்றார்கள்?”

செயலற்ற நிலையில் கேட்டதை கொடுத்துவிட்டு அந்தபுரத்தில் அழுதுகொண்டிருந்த மன்னருக்கு, 1895ல் ஒரு இளைஞன் வேலைக்கு வந்தான்.

அவன் கன்னட மாநிலம் முட்டனஹள்ளி பிறப்பு, வறுமையிலும் தன் திறமையால் கற்று வளர்ந்திருந்தான்

அப்பொழுதே சிவில் இன்சினியரிங் முடித்திருந்த பிராமண இளைஞன், பெரும் அறிவாளி, கட்டடகலை நிபுணர், எல்லாவற்றிற்கும் மேல் பெரும் நிர்வாகி.

“தனது வேலையில் கருத்தாக இருப்பவன், அரசனோடு பந்திக்கு அமர்வான்” என்பது பழ‌மொழி, அவனும் அப்படித்தான் விரைவில் திவான் ஆனான்

மைசூர் சமஸ்தானம் தஞ்சாவூருக்கு வெள்ளநிவாரண நிதிகொடுத்து அழுதுகொண்டிருக்கும் பொழுது அவன் நிதானமாக திட்டமிட்டான்.

வீணாக செல்லும் நீருக்கு தஞ்சை மக்களுக்கு கப்பம் கட்டுவதை விட, நாமே அணைகட்டி விவசாயத்தை பெருக்கினால் என்ன?, அதுவரை அப்படி ஒரு திட்டம் மைசூருக்கு இல்லை, அவரை வினோதமான பார்த்தமன்னன் கேட்டார்? அது சாத்தியமா?

எனக்கு சாத்தியம் இல்லை என்றால் எவனுக்கும் சாத்தியமில்லை என்றான் அந்த இளைஞன்.

அவன் அதற்கு முன்பே உலகெல்லாம் சுற்றி பெரும் அனுபவம் பெற்றிருந்தான். எகிப்தின் நைல் நதி அணைகட்டு முதல் ஜப்பான் சீனா என உலகெல்லாம் சுற்றி பெரும் நிபுணத்துவம் பெற்றிருந்தான்.

அந்த அனுபவமே அவனை மகா உறுதியான அசாத்திய கட்டட கலாநிதி என்றாக்கிற்று

காவேரி பெரும் ஆறு ஆனால் அதோடு ஹேமாவதி,சிம்சா,அக்ராவதி,கபினி என பல சிற்றாறுகள் கலந்துதான் வெள்ளம் தமிழகம் செல்லும், முதலில் நாம் காவேரி குறுக்கே அணைகட்டினால் பாதிவெள்ளம் குறையும், அதாவது நஷ்டஈடு குறையும்.

அற்புதமான யோசனை சொன்ன இளைஞனை நம்பிக்கையாய் பார்த்தது மைசூர், அந்த இளைஞர் விஸ்வேசுவர அய்யர்.

கன்னடத்தின் அப்துல்கலாம் அல்லது லி குவான் யூ அவரின் அறிவுகூர்மையும், செயல்திறனும் அப்படி.
அற்புதமாக கட்டிகொடுத்த அணை கிருஷ்ணராஜ சாகர், மீதி நீர் தஞ்சை மக்களை அழிக்காமல் இருக்க வெள்ளையர் கட்டியது மேட்டூர் அணை.

அணைகட்டிவிட்டால் போதுமா? அந்த நீரை எப்படி விவசாயமாக்குவது, எப்படி தடுப்பணை கட்டுவது, உற்பத்தியை பெருக்குவது எப்படி என பெரும் அகராதி வகுத்தார் விஸ்வேசரையர்.

அவர் கொடுத்த அடித்தளத்தில்தான் மைசூர் விவசாயத்தில் செழித்தது, கர்நாடக பொன்னி, மைசூர் பருப்பு , பெங்களூர் தக்காளி இன்று தமிழகத்தை தாங்கும் அரிசி காய்கறிகள் என கன்னடம் கொட்டி முழக்குகின்றது என்றால் அதற்கு காரணம் அவர்தான்.

முத்துபடத்தில் ரஜினி குதிரைவண்டியோடு பசுமைவயல்கள் வழியே மணிக்கணக்கில் செல்வாரல்லவா? அந்த பசும் வயல்கள் அவரின் உருவாக்கம்.

இன்று கன்னடத்தில் சிறிதும் பெரிதுமாக காணப்படும் 28 அணைகளுக்கும் அவரே முன்னோடி. கட்டடகலை அவருக்கு கைவந்தது.

கன்னட அடையாளமான விதான சவுதா, இன்னும் பல ஆலைகள் எல்லாம அவரின் டிசைன்.

அன்று மிகசிறிய ஊரான பெங்களூர் இன்று உலகின் முன்னனி நகரம் என்றால் அதற்கு அய்யரும் ஒரு காரணம். இந்தியாவின் ஒப்பற்ற இன்சினியரான அவரின் பிறந்தநாள்தான் இந்தியாவில் “இஞ்சினியர் தினம்”
இந்தியாவின் மிக சிறந்த கட்டட பொறியாளரில் அவரும் ஒருவர்.

ஐதரபாத் வெள்ளதடுப்பிற்கு அவர் போட்டு கொடுத்த திட்டம் இன்றும் பயன்படுகின்றது

சுதந்திர இந்தியாவின் மிகபெரிய அணையும் ஆசியாவின் அதிசயமுமான பக்ரா நங்கல் அணை கட்டபட்டதிலும் அவரின் பங்கு உண்டு

காமராஜர் காலத்தில் தமிழகத்தில் கட்டபட்ட எல்லா அணைகளிலும் அவரின் மேற்பார்வை உண்டு, நுணுக்கமான அணுகுமுறைகளும் மாற்றங்களும் உண்டு

பெரும் தொழிற்சாலைகளுக்கான நிர்மாணத்தை எல்லாம் அவர்தான் இந்தியாவில் செய்தார். மறக்க முடியா மாமனிதர் அந்த விஸ்வேசரய்யர்.

கிருஷ்ணராஜ சாகருக்கு முன்பே பிரிட்டிசாரோடு சேர்ந்து நிறைய அணைகட்டிய சாதனைகளை அவர் செய்திருக்கின்றார். நவீன‌ இந்திய அணைகட்டுகளின் பிதா மகன் அவர்.

அந்த அறிவாளியினை மிக சரியாக பயன்படுத்திகொண்டது கர்நாடகம், பின்னாளைய கன்னட எழுச்சிக்கு அவர் மிக பெரும் அடித்தளம் அமைத்தும் கொடுத்தார்.

தமிழகத்திற்கு அப்படி யாரும் கிடைக்காமலே போனதுதான் பெரும் சோகம், அதுவும் பின்னாளில் அய்யர்களுக்கு ஆகாத மாநிலமாகவே அறியபட்டது தமிழகம், பின் எங்கிருந்து வருவார்கள்?

ஆனால் அப்படி ஒரு அறிவாளி வராமல் இனி உருப்படாது தமிழகம்.

பொறியியல் கல்லூரி நிறைந்திருக்கும் தமிழகத்தில் இப்படி ஒரு தினம் இருப்பது தெரியுமா? கொண்டாடுவார்களா என்றால் கொண்டாட மாட்டார்கள்.

அதற்கு ஆயிரம் காரணங்கள். எப்படியாயினும் விஸ்வேஸரய்யர் இந்திய வரலாற்றில் முக்கியமான ஒருவர் என்பதில் சந்தேகமேயில்லை.

விஸ்வேசர்ய்யாவின் பிறந்த நாளில் கன்னட அணையும் விதான சவுதாவும் இன்னும் பல ஆலைகளும் பாலங்களும் நினைவுக்கு வரும்

அப்பொழுது உடைந்துவிழும் சென்னை விமான நிலையம், வெறும் சாரல் மழைக்கு இடியும் பாலம், திடீரென சரிந்துவிழும் பேருந்து நிலையம், குபீரென சரியும் பாலம் போன்ற தமிழக காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரவே கூடாது

இது திராவிட பகுத்தறிவு மண் இப்படித்தான் இருக்கும், அதாவது அவை கட்டபடும் பொழுது இது ராம்சாமி, கருணாநிதி, அண்ணா மண் என்பதால் அது கொஞ்சம் கூடுதலாக சிமெண்டில் கலந்து கட்டபட்டு கட்டங்கள் உறுதி இல்லாமல் ஆகிவிடுகின்றன , இடிகின்றன வேறொன்றுமில்லை

பெரியார் மண் அப்படி..

பெங்களூரும் இன்னும் கன்னட நகரங்களும் வளரும் மாண்டியாவும் இன்னும் பலவும் செழிக்கும், காரணம் அது பெரும் அறிவாளி விஸ்வேஸ்ரய்யாவும் அவனுக்கு முன்பே கடவுள் உண்டு என சொல்லி சீர்திருத்தங்களை செய்ய்த பசவய்யாவும் காரணம்

தமிழ்நாடு இன்னும் நாசமாகும் காரணம் இங்கு ஏகபட்ட அழிச்ச்சாட்டியங்களை செய்த, கோவிலை சுத்தபடுத்துவதற்கு பதிலாக இடித்து போட்ட ராம்சாமி அண்ணா கோஷ்டிகள் உள்ள மண் இது

விஸ்வேஸ்சய்யா சிற்பி அவன் மிக கவனமாக செதுக்கினான்

இது கடப்பாரை கோஷ்டி எல்லாவற்றையும் அழிக்க இவர்களுக்கு தெரியுமே தவிர உருப்படியாய் ஒன்றையும் உருவாக்க தெரியாது, தெரியவே தெரியாது

கன்னட சிற்பி அந்த விஸ்வேஸ்ரய்யர், கன்னடம் இன்று உயர்ந்து நிற்கின்றது, கன்னடம் தாண்டி தேசமெங்கும் அவரின் உழைப்பில் பல அற்புதமான விஞ்ஞான அடையாளங்கள் கிடைத்து நாடு பலமாயிற்று, வளமாயிற்று

கல்வியும் நாட்டுபற்றும் பக்தியும் தீர்க்கதரிசனமும் அறிவும் கொண்ட பிராமணனிடம் பொறுப்பை ஒப்படைத்து அவனின் ஒப்பற்ற உழைப்பால் அர்பணிப்பால் வாழ்கின்றது கன்னடம்

அவன் “பாரத ரத்னா” என கொண்டாடாட்டதில் முழு அர்த்தம் உண்டு

மடதனமும், பிரிவினைவாதமும், சுயநலமும், முழு முட்டாள்தனமும், அறிவும் எதிர்கால சிந்தனையுமில்லா முரட்டு முட்டாளை தமிழர் தந்தை என சொன்ன தமிழகம் தரித்திரமும் குழப்பமும் மாபெரும் அவலமும் கொண்ட மாநிலமாக கலங்கி நிற்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here