விண்ணப்பத்தில் முகத்தை மூடி போட்டோ!போலீஸ் வேலைத் தேர்வுக்கு அனுமதி மறுப்பு!!

காஷ்மீர், கேரள மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லீம் ஜனத்தொகை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அண்டை நாடான பங்களாதேஷிலிருந்து கோடிக்கணக்கானவர்கள் ஊடுறுவி மேற்கு வங்கத்தில் குடியமர்ந்துள்ளனர். முன்பு ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சியும், தற்போது ஆட்சியில் உள்ள திரிணாமுல் கட்சியும், ரேசன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை அளித்து தங்கள் ஓட்டு வங்கியாக பயன்படுத்தி வருகின்றன. இதன்காரணமாக இந்தியாவிலேயே அதிக முஸ்லீம் எம்எல்ஏக்கள் கொண்ட மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது.

அம்மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 70 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்கட்சியாக பாஜக அமர்ந்துள்ளது. இதைசகிக்காத முஸ்லீம் அமைப்புகள் கலவரங்களில் ஈடுபட்டன. இதில் என்னற்ற இந்து தாய்மார்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பல அப்பாவி பாஜக தொண்டர்கள் வெட்டிக் கொடூரமாக கொல்லப்பட்டனர். பலரது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்த கலவரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே அரசுப்பணிகளில் திட்டமிட்டு, குறிப்பாக போலீஸ் துறையில், முஸ்லீம்களை புகுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இது சமீபத்தில் மேற்கு வங்க ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய மனு மூலம் வெளி வந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் போலீஸ்வேலைக்கு விண்ணப்பித்த தங்களுக்கு தேர்வு எழுத ஹால்டிக்கெட் தரப்படவில்லை என்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம் பெண்கள் இணைந்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இது குறித்து நடந்த விசாரணையின் போது, மேற்கு வங்க போலீஸ் தேர்வு வாரியம், இந்த பெண்கள் தங்கள் விண்ணப்பத்தில் முகத்தை மூடி ஹிஜாப் அணிந்து(பர்தா) போட்டோ ஒட்டியிருந்தனர். இது விதிமுறைகளுக்கு எதிரானது. அதனால் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படவில்லை என்றனர்.

பாஸ்போர்ட் எடுக்கவும், பல்வேறு சலுகைகள் பெறவும் இந்தியாவில் முஸ்லீம் பெண்கள் தங்கள் முகம் தெரியும் போட்டோக்களை பயன்படுத்துகின்றனர். போலீஸ் வேலைக்கான தேர்வில் இவர்கள் முகம் தெரியாத போட்டோக்களை பயன்படுத்தும் போது, தேர்வில் மோசடி செய்வதற்காக இதுபோன்ற படங்களை பயன்படுத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது.

சவுதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் பணியில் இருக்கும் பெண் போலீசார் யாரும் முகத்தை மூடி ஹிஜாப் அணிவதில்லை. ஆனால் மேற்கு வங்கத்தில் போலீஸ் வேலையில் சேரும் இவர்கள் முகத்தை மூடிக் கொண்டு வேலை செய்வார்களா என்ற பல கேள்விகள் எழுந்தன.

இதையடுத்து போலீஸ் தேர்வுக்கு இடைக்கால தடைவிதித்த ஐகோர்ட், வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 6 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here