அதிரடி காட்டிய உத்தரப்பிரதேச மக்கள்..! வரலாற்று வெற்றியில் யோகி ஆதித்யநாத்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது இதனால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் அவரின் மிகச் சிறந்த ஆளுமை மக்கள் அளித்துள்ள அங்கீகாரமும் வெளிப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளை தலைகீழாக புரட்டிப் போட்டு இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சிகளின் கோட்டையாக கருதப்படும் ரேபரேலி,அமேதி, மெயின்புரி என அனைத்தும் தற்போது பாஜகவின் வசமாகியுள்ளது. இத்தனை காலமாக ஜாதியின் பெயரால் மக்களை ஏமாற்றி வந்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தக்கபாடம் புகட்டியுள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த வெற்றி பாஜகவினருக்கு பெரும் ஊன்றுகோலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை சாதிய ரீதியாக மக்களை பிரித்து அரசியல் செய்து வந்த உத்தரபிரதேச மோசடி அரசியல் கட்சிகள் மீண்டும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பல்வேறுவழிகளில் போராடி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் பணபலம் மற்றும் ஊடக பலங்களை கொண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதுபோல் ஒரு மாய பிம்பங்களை உருவாக்கி வந்தனர் அவற்றை எல்லாம் தவிடு பொடி ஆக்கும் வகையில் மக்கள் யோகி அரசுக்கு வாக்களித்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டனர்.

உத்திரபிரதேச மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றான மாவட்ட தலைவர் எனப்படும் ஜில்லா பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடைபெற்றன. அவற்றில் மொத்தம் 77 இடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது இதில் பாஜக காங்கிரஸ் சமாஜ்வாதி போன்ற கட்சிகள் நின்றன. இதில் சில இடங்களில் காங்கிரசும், சமாஜ்வாதி கட்சியும் பொது வேட்பாளர்களை நிறுத்தினார், ஆனால் பாஜகவும் அதன் கூட்டணி கட்சியும் மொத்தம் 67 இடங்களை கைப்பற்றின. இதில் சமாஜ்வாதி கட்சிக்கு 6 இடங்கள் மட்டுமே கிடைத்தது காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை டக் அவுட் ஆனது.

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவின் சொந்த லோக்சபா தொகுதி மெயின் புரி கடந்த 30 ஆண்டுகளாக ஜில்லா பஞ்சாயத்து தலைவர் பதவி சமாஜ்வாதி கட்சி வசம்தான் இருந்தது. ஆனால் இம்முறை சமாஜ்வாதி கட்சியின் கோட்டையான மெயின்புரியை பாஜக கைப்பற்றிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகள் எனக்கூறப்படும் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகள் இப்போது பாஜக வசம் ஆகிவிட்டது. இத்தனைக்கும் அமேதியில் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாமல் ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ் ஆனாலும் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற முடியவில்லை சமாஜ்வாதி கட்சிக்கு வலிமையாக இருக்கக்கூடிய கன்னோஜ், பிரோசோபாத் ஆகிய இடங்களிலும் கூட பாஜக வெற்றி பெற்றுள்ளது.

குடும்ப பாரம்பரியம் வாரிசு என்றெல்லாம் சொல்லிக்கொண்டு மக்களை வெகுகாலத்திற்கு அடிமைகளாக வைத்திருக்க முடியாது என்று காட்டும் வகையில் இந்திராவின் பேத்தியும், சோனியாவின் மகளுமான பிரியங்காவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ்காரர்களும் பெருமூச்சு விடுகின்றனர்.என்னதான் அதிரடி முடிவுகள் எடுத்தாலும் ஓட்டு அரசியலை குறிவைத்து இயங்காமல் நேர்மையாக ஆட்சி செய்தாலும், மக்கள் அதனை விரும்பி ஆதரவளிப்பார்கள் என்பதற்கு யோகி ஆதித்யநாத் ஒரு உதாரணத்தை காட்டியுள்ளார். இந்த பேரிடர் காலமான கடினமான காலகட்டத்திலும் கூட மாநில வளர்ச்சியும் மக்களின் முன்னேற்றமே ஆட்சி செய்பவர்களுக்கு நம்பிக்கை அளித்து ஆளும் அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதை காட்டியுள்ளனர் புத்திசாலி உத்திரபிரதேச மக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here